facebook-round

img

காஷ்மீரில் நிலம் வாங்க துடிப்போர் கவனத்திற்கு...

ஒரு சென்ட் நிலமாவது காஷ்மீரில் வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையுடன், மோடி-அமித்ஷாவுக்கு சில்லறையை சிதறவிடுவோர் கவனத்திற்கு...
“ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து (370) ரத்து செய்யப்பட்டாலும் அங்குள்ள பழங்குடி மக்களின் அடையாளம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவை பாதுகாப்படும் வகையில், உள்ளூர் மக்களின் நில உரிமை காக்கப்படும் வகையிலும் இந்திய அரசியல் சட்டத்தின் 6வது அட்டவணையில் உள்ள பழங்குடி இன உரிமைகளை அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் வழியில் பாதுகாக்க வேண்டும். பழங்குடியினரின் நிலத்தைப் பாதுகாப்பதும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்துவதுமே தற்போது பெரும் சவாலான பிரச்சினையாகும்” என மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முன்டாவிடம் மனு அளித்திருப்பவர் யார் தெரியுமா? 
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களைத் தெறிக்கவிட்டதாக, பா.ஜ.க. பரிவாரங்கள் கூத்தாடிய அதே லடாக் எம்.பி. ஜம்யங் செரிங் நம்ங்க்யால்தான்தான் இந்த மனுவை அளித்திருக்கிறார். ஒரு சென்ட் நிலம் வாங்கத் துடிப்பவர்களைப் பார்த்து, “ஷட் அப் பண்ணுங்க.. ஸ்பிரே அடிச்சிடுவேன்” என்று தனது மனு மூலம் சொல்லியிருக்கிறார் பா.ஜ.க. எம்.பி. அதுமட்டுமின்றி, பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு நம்ங்க்யால் வைத்துள்ள வேண்டுகோளில், “லடாக்கில் 55% முஸ்லிம்கள், 44% புத்தமதத்தினர் என்கிற மக்கள்தொகை அளவு காப்பாற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்திருப்பதன் மூலம், வெளியாட்கள் யாரும் சென்ட்டு, சந்தனம் என்று இங்கே நுழையக்கூடாது, பொத்திக்கிட்டுப் போயிடணும் என்பதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

லடாக் எம்.பி. இப்படியென்றால், பா.ஜ.க.வின் மாநில செய்தி தொடர்பாளரும் பண்டிட் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான குமார் ஷ்ருங்கூ, “காஷ்மீரிகள் தங்களின் நாகரிகம்-பண்பாட்டு உரிமைகளை இழந்துவிட்டு வாழ விரும்பமாட்டார்கள். யூனியன் பிரதேசமாகவே இந்த நிலம் நீடிப்பதை இங்குள்ள யார்தான் விரும்புவார்கள்? 370வது பிரிவு நீக்கப்பட்டாலும், இருப்பிடம் தொடர்பான சட்டங்கள் ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பில் முதலில் உள்ளூர் மக்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அரசு உருவாக்க வேண்டும். அந்த இடஒதுக்கீடு போக, மிச்சமுள்ள பொது ஒதுக்கீட்டிலும் தகுதியின் அடிப்படையில் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். தற்போதைய மக்கள் தொகை விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். எனவே, காஷ்மீர் மக்களின் இருப்பிட பாதுகாப்பு-வேலைவாய்ப்பு உறுதிக்கான சட்டங்கள் காலத்தின் தேவை” எனத் தெரிவித்துள்ளார். 
கூடுதல் விவரங்களுக்கு https://www.thehindu.com/…/focus-turns…/article29161988.ece…
கரடிகளே காரித் துப்பியிருப்பதால் சென்ட் பார்ட்டிகள் Please Take Diversion

திருவள்ளுவர் ஆண்டு 2050 ஆவணி 3

Govi Lenin

;