headlines

img

விண்வெளித்துறையில் ஒரு மைல் கல்

விண்வெளித்துறையில் நமது விஞ்ஞானிகள் பிரமிக்கத்தக்க சாதனைகளை படைத்து வரு கின்றனர். விண்வெளிக்கு மனிதர்களுடன் விண் கலத்தை 2022ல் அனுப்ப இந்தியா திட்டமிட்டுள் ளது.  இதுவரை, விண்வெளிக்கு மனிதர்களை ரஷ்யா,அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே அனுப்பியுள்ளன. இந்தத் திட்டத்துக்கு தேவை யான  தொழில்நுட்பங்கள்,  மனிதர்களுடன் விண் கலம் புவிஈர்ப்பு பகுதியில் நுழைவதற்கான சோதனை, விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்குதல் ஆகியவை வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டுள்ளன. 

இந்தியா புதனன்று விண்ணில் ஏவிய பிஎஸ் எல்.வி-சி 48 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப் பட்ட 50வது  பி.எஸ்.எல்.வி ராக்கெட். இந்தியா தனது தேவைக்கான செயற்கைக்கோள்களை மட்டுமல்லாமல் வர்த்தக ரீதியில் மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களையும் செலுத்தி வருகிறது. இதனால் நமது விண்வெளித்துறை மூலமாக நாட்டி ற்கு அந்நியச் செலாவணியும் கிடைக்கிறது.

பிஎஸ்எல்வி மட்டுமல்லாமல் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை தாங்கிச்சென்று புவியின் சுற்றுவட்டப்பாதையில் அதை நிலை நிறுத்தும் வகையில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டு களை செலுத்துவதிலும் நமது விஞ்ஞானிகள் மிகப் பெரிய சாதனையை எட்டிவிட்டனர். இதற்கான தொழில்நுட்பத்தை முதலில் இந்தியா வெளி நாடு களில் இருந்து வாங்கியது. அமெரிக்கா அந்த தொழில்நுட்பத்தை தரமறுத்த போது ரஷ்யா தர முன்வந்ததோடு இந்தியாவிலேயே கிரையோ ஜெனிக் என்ஜின் தயாரிக்க தொழில்நுட்ப உதவியையும் அளித்தது. இதனால் இன்று இந்தி யாவில் அதிக எடைகொண்ட செயற்கைக் கோள்களை புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்த முடிகிறது.

சந்திரயான் திட்டத்தில் சில தொய்வுகள் ஏற் பட்டாலும் எந்த நாடும் இதுவரை அனுப்பாத நில வின் தென்துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பி யதே ஒரு சாதனைதான். இந்தியா அனுப்பிய விண்கலம் விழுந்து நொறுங்கியபோதும் அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட நமது விஞ்ஞானி கள் விரைவில் தங்களது இலக்கை எட்டுவார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது. இது மட்டுமல்ல இந்தியா அண்டம் குறித்த ஆராய்ச்சியிலும் பல மடங்கு முன்னேறியுள்ளது.  அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான விஞ்ஞா னிகள் சனியின் துணைக் கோள் அல்லது சூப்பர் நெப்டியூன் அளவு கொண்ட கிரகத்தை கண்டு பிடித்தனர். இந்தக் கண்டுபிடிப்பின்மூலம், சூரிய குடும்பத்தைத் தாண்டி, நட்சத்திரத்தைப் போன்ற கிரகங்களை கண்டுபிடித்த குறிப்பிட்ட சில நாடு களின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. 

இவ்வளவு சாதனைகளை படைத்த நமது விஞ்ஞானிகளால் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அத்தகைய திட்டங்க ளுக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். மேலும்  விண்வெளி தொடர்புடைய ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச தரத்திலான கட்டமைப்பு வசதிகளையும்  செய்து தரவேண்டி யது இன்றியமையாதது.

;