headlines

img

ஒளியும் ஒலியும் -'தி இந்து' தலையங்கம்

ஒளியும் ஒலியும் -'தி இந்து' தலையங்கம்

ஒரே கூப்பாடு;பக்தி மயம்.ஆனால் எந்த முக்கியத்துவமும் இல்லை. வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவதுபேருரை இது .

அல்லற்பட்டு ஆற்றாது இருக்கும் மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் அது தரவில்லை.

நோய் பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகத்தின்அனைத்துப்பகுதி மக்களிடமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

24ஆம் தேதி முழு அடைப்புஅமல்படுத்தப்பட்டது. இது பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது;சிறு வியாபாரிகள் ரத்தக் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறார்கள்.

பெரிய கம்பெனிகள் எப்படியாவது சமாளித்துவிட வேண்டும் என்பதற்கான முயற்சியில் குழப்பமும் பதட்டமும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அங்குமிங்குமாக சாலைகளில் பசியோடு சிதறிக் கிடக்கிறார்கள்.

மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பு பணியாளர்களும் கிட்டத்தட்டஅவர்களின் விளிம்பு நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த நோய் பேரிடர் எத்தகையது என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை நீடித்துக்கொண்டிருக்கிறது.

பிரதமர் தன்னுடைய ஒவ்வொரு பேச்சிலும் குறிப்பிடுவதுபோல அவருடைய பேச்சை கேட்பதற்கு ஆர்வமாக இருக்கும் கூடிய 130 கோடி இந்தியர்களும் இந்த பிரச்சினைகள் குறித்து மிகுந்த கோபத்தோடு இருக்கிறார் .

இந்த பிரச்சனைகளில் எல்லாம் அவற்றை எதிர்கொள்வதற்கு ஒரு தெளிவான நம்பிக்கை அளிக்கக்கூடிய திட்டத்தையும் எதிர்காலம் முன்வைக்கும் சவால்களையும் அவர்கள் பிரதமரிடம் இருந்து எதிர்பார்த்தார்கள்.

ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும் என்பது பற்றிய ஒரு தெளிவை அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

சிரமங்களைப் போக்குவதற்கு கூடுதலான நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஏற்கனவே நிதியமைச்சரும் ரிசர்வ் வங்கி கவர்னரும் அறிவித்தது தாண்டி வேறென்ன அறிவிக்கப் போகிறார் என்பதை பற்றியான ஆர்வம் மக்களிடம் இருந்தது.

பல ஜனநாயை நாடுகளின் தலைவர்கள் மக்களிடம் இத்தகைய உரைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

நோய் எத்தகையது அதை எதிர்கொள்வதற்கு எத்தகைய திட்டங்களை வைத்திருக்கிறோம் என்பது குறித்தான தெளிவான குறிப்பான திட்டங்களை அவர்கள் முன்வைத்தார்கள்.

அவர்கள் இதை ஒரு உரையாடலாக நடத்தினார்கள். மக்கள் கேள்வி கேட்க முடிந்தது.

மத்திய அரசின் அரசியல் தலைமை மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கிறது. மோடியும் கூட தான் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். எந்த பிரச்சனைகளைப் பற்றியும் கேள்விகளை அவர் அனுமதிப்பது கிடையாது.

ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இத்தகைய வாய்வீச்சுகள் தேவைதான். அது உண்மையில் தேசத்திற்கு நலம் பயக்கும் தான் .ஒற்றுமை படுத்துவதற்கும் ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கும் அதன்மூலமாக தேசம் எதிர்கொண்டிருக்கிறார்நோய் பேரிடரை எதிர்கொள்வதற்கும் இது முக்கியமானது.

அந்த வகையில் பிரதமர் அவருடைய பேச்சு சரிதான். ஆனால் மணியடிப்பது சங்கு ஊதுவதுஎன்பதெல்லாம் நோக்கங்களை பெருமளவுக்கு குலைத்து விடுகின்றன.

இந்த நோய் பேரிடர் மனிதர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் தான் அதை தீர்ப்பதற்கு என்று ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள்ஒளிச் சடங்குகளை முன்மொழிந்து இருக்கிறார்.இதுவும் ஒரு துயரம்தான

வழக்கம்போலவே ஒருபகுதியினர் ஆரம்பித்துவிட்டார்கள். சமூக ஊடகத்தின் மூலமாக இந்த ஒன்பது மணி 9 நிமிடம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து இது ஒரு நிபுணத்துவம் என்று பேசித் திரிகிறார்கள்.

மத்திய தகவல்துறை அப்படியே அப்படி எதுவும் இல்லை என்று மறுப்புச் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

வதந்திகளுக்கும் அறிவியல் பூர்வமற்ற விளக்கங்களுக்கும் இறையாகி விடாதீர்கள் என்று அது வேண்டுகோள் விடுத்திருக்கிறது .

பிரதமரும் கூட நோய் குறித்து வதந்திகளை நம்பாதீர்கள் தவறான செய்திகளை நம்பாதீர்கள் நம்பிக்கைக்குரிய செய்தி தளங்கள் மூலம் வருகிற தகவல்களை மட்டுமே நம்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருக்கிறார். மோடிக்கு இந்திய சமூகத்தில் ஒரு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அவருடைய பேச்சுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் எந்த ஊரு நாடும் தான் எதிர்கொள்கிற நோய் பேரிடர் மற்றும் பொருளாதார சீர்குலைவைப் பற்றி இப்படி பேசிக்கொண்டே இருக்க முடியாது .

வார்த்தைகள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்று நீங்கள் பேசிக் கொண்டே இருந்தால் வைரஸ் மிக அமைதியாக உங்களைவிட்டு விலகி எல்லாம் போகப் போவதில்லை.

நீங்கள் ஏற்றுகிற மெழுகுவர்த்திகளை பார்த்து சரிந்து கொண்டும் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்கப் போவதில்லை .

அடையாள பூர்வ நடவடிக்கைகள் முக்கியமானவை தான் ஆனால் அது முக்கியத்துவம் பெறுவது இந்த செயல்களோடு இணையும்போதுதான்.

நன்றி: The hindu

https://www.thehindu.com/opinion/editorial/light-and-sound-the-hindu-editorial-on-narendra-modis-9-minute-light-ceremony/article31252125.ece?fbclid=IwAR3UV1y1GQkC1eq5qcYuWSzsRY_V09JYkDHfwhvsX9WkzHfMddE-aJORJgk

தமிழில்: க.கனகராஜ்

Kanagaraj Karuppaiah

;