tamilnadu

img

பெரியகுளம் கோவில் பூசாரி தற்கொலை... காவல்துறை அதிகாரிகளை குற்றவாளிகளாக சேர்க்கக்கோரி வழக்கு...

மதுரை:
பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி கைலாசபட்டி, கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகளை குற்றவாளிகளாக சேர்க்கக் கோரிய வழக்கில்  அரசு பதிலளிக்க சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம்  டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நாக முத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்தார். இவரை தற்கொலைக்குத் தூண்டியதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகரசபை முன்னாள் தலைவருமான ஓ.ராஜா உட்பட பலர் மீது  தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சம்பவத்தின் போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்களாகப் பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது,  ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகி யோரை குற்றவாளிகளாக சேர்க்கக்கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்தார். தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் இதே கோரிக்கைக்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல்செய்தார்.இந்த மனுவை வியாழனன்று விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் வழக்கு குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை பிப்ரவரி 27- ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.

;