tamilnadu

img

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் உற்பத்தியைத் தொடங்க முடிவு

மதுரை:
அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. நிர்வாகக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான  வழக்கறிஞர் என்.பழனிசாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

2020-21-ஆம் ஆண்டிற்கானஅரவையை தொடங்குவது, அறுவடை செய்த 15 நாட்களில் கரும்பு கிரைய தொகையை வழங்குவது, தரமான விதை, முழு மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்க உதவிகள் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானியங்கள் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் ஆலை மூலம் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் கரும்பு பயிரிட்டு நடப்பாண்டில் ஆக.,15-ஆம் தேதிக்குள் தங்களது பகுதியில் கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும் என ஆலை மேலாண்மை இயக்குநர் செந்தில்குமாரி, உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

;