tamilnadu

img

மதுரையில் கொரோனாவுக்கு கூடுதல் பரிசோதனை சிபிஎம், திமுக கோரிக்கை நியாயமானதே...

மதுரை:
கொரோனா பரிசோதனையை மதுரையில் அதிகப்படுத்த வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.மூர்த்தி, மருத்துவர்கள் சரவணன் ஆகியோரது கோரிக்கை நியாயமானது தான் என பாஜக மாநிலத் தலைவர் ஸ்ரீனிவாசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

செவ்வாயன்று மதுரையில் அவர் அளித்த பேட்டி:- 
சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை பா.ஜ.க.ஆதரிக்கிறது. இந்த முடிவை முன்கூட்டியே எடுத்திருக்கலாம். தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவிகிதம் குறைவாகவே உள்ளது.மத்திய அரசு மின்சாரசீர்திருத்த சட்டத்தின்படி விவசாயிகளுக்கு, மக்களுக்கு மாநில அரசுகள் இலவசமாக மின்சாரம் மாநில கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை. இலவச மின்சாரத்தை ரத்து செய்வதாகவும் சொல்லவில்லை. மாநில அரசு அளிக்கும் இலவச மின்சாரத்திற்கான கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகள் கட்ட வேண்டும் என்றுதான் கூறியுள்ளது.கொரோனா பரவலால்  இந்தியாவிற்கு பல முதலீடுகள் வருகிறது இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேற்றி உலக நாடுகளுக்கு இணையாக கொண்டு செல்வதே பா.ஜ.க.வின் நோக்கம். தி.மு.க. வைத்திருக்கும் கறுப்பு பணத்தை வெளியில் எடுத்து மக்களுக்கு உதவி செய்தால் நல்லது.

கொரோனா பரிசோதனையை மதுரையில் அதிகப்படுத்த வேண்டும் என்ற எதிர்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை நியாயமானது.*மதுரைக்கு வந்த சோதனையா என்ற திரைப்பட பாணியிலும் கேட்கலாம் அரசு முடிவு எடுத்து மதுரை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.கொரோணாவை தடுப்பதில் அரசு மட்டும் முனைப்பு காட்டினால் முடியாது. மக்களும் தங்களின் சுய பாதுகாப்பிற்காக முனைப்புடன் செயல்பட வேண்டுமென்றார்.

;