tamilnadu

img

கொரோனா வைரஸ்.... மதுரையில் மீண்டும் தொற்று அதிகரிப்பு 

மதுரை: 
தமிழகத்தில் கொரோனவின் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை 72 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் மட்டும் கடந்த 72 மணி நேரத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளியன்று 6,880 பேரின் சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 72,403 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது. வீட்டுக் கண்காணிப்பில் 25,503 பேர் உள்ளனர். 19 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். வெள்ளியன்று 114 பேர் வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 866 ஆக உள்ளது.

வெள்ளிக்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமாக  சென்னையில் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. கோயம்புத்தூரில் ஏழு பேரும், மதுரையில் நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், தென்காசியில், திருவண்ணாமலை, விருதுநகரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்குதலில் அதிகபட்சமாக சென்னையில் 452 பேர், கோயம்புத்தூரில் 141 பேர், திருப்பூரில் 110 பேர், திண்டுக்கல்லில் 80 பேர். ஈரோட்டில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 56 பேர், நாமக்கல்லில் 55 பேர், தஞ்சாவூரில் 55 பேர், திருவள்ளூரில் 52 பேர், திருச்சிராப்பள்ளியில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மற்ற மாவட்டங்களில் பாதிப்பு 50-க்கும் குறைவாக உள்ளது. அதாவது இரட்டை இலக்கத்திலேய உள்ளது. மிகக்குறைவாக தர்மபுரி, புதுக்கோட்டையில் தலா ஒருவர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் ஐந்து பேர், நீலகிரியில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

;