tamilnadu

img

மக்கள் நடமாட்டம் இல்லா சாலைகள்... கோவிட் 19 எச்சரிக்கையால் எங்கும் அமைதி

நாகர்கோவில்:
நாடு முழுவதும் கோவிட் 19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக  செவ்வாயன்று மாலை 6 மணி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் நாடு முழுவதும் இந்த தடை அமலுக்கு வந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் வாகன போக்குவரத்து முடங்கினாலும் சில தனியார் வாகனங்கள் ஆங்காங்கே இயங்கின. ஆனால், புதனன்று  அதிகாலை முதல் திருவனந்தபுரம் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிய நிலையில் உள்ளன. 

மேலும் குமரியில் மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ்களும், சில தனியார் வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் மட்டுமே இயங்கி வருகின்றன. சாலைகளில் வாகனங்கள் செல்லாததால் மக்கள் நடமாட்டமும் இல்லாமல் அமைதியான சூழல் நிலவுகிறது. குமரியில், 24 மணி நேரமும் பொதுமக்களும், பேருந்துகளும் நிறைந்து காணப்படும் வடசேரி பேருந்து நிலையமும், அண்ணா பேருந்து நிலையமும் புதனன்று வெறிச்சோடிய நிலையில் உள்ளன. தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை மற்றும் நெல்லை - குமரி எல்லையான காவல்கிணறு ஆகிய பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

;