tamilnadu

img

அச்சமின்றிப் பணியாற்ற பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்திடுக... கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

நாகப்பட்டினம்:
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் ஐந்தாவது மாநில மாநாடு, நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசுஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.  முன்னதாக, செவிலியர்களின் பேரணி, அரசுப் போக்குவரத்துக் கழகப்பணிமனை முன்பிருந்து துவங்கி, அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் முன்பு நிறைவு பெற்றது. பேரணியைத் தமிழ்நாடு அரசுக் கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.செளந்தராஜன் துவக்கி வைத்தார்.

மாநில மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பரமேஸ்வரி தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும் அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலாளருமான அ.தி.அன்பழகன் வரவேற்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.ராஜகுமார் துவக்கவுரையாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் பா.ராணி வேலை அறிக்கையை முன்வைத்தார்.சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி, நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்புத் தலைவர் சு.சிவகுமார், புள்ளியியல் துறை சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ப.அந்துவன்சேரல், வருவாய்த்துறை அலுவலர்சங்க மாவட்டச் செயலாளர் து.இளவரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாநிலத் துணைத் தலைவர் கோ.பழனியம்மாள் சிறப்புரையாற்றினார்.

புதிய நிர்வாகிகள்
மாநிலத் தலைவராக சி.பரமேஸ்வரி(உதகை), மாநிலப் பொதுச் செயலாளராக பா.ராணி (நாகை), பொருளாளராக ஏ.பிரகலதா (கோவை), மாநிலத் துணைத் தலைவர்களாக கே.பூங்குழலி (காஞ்சி), பி.இளஞ்சியம் (புதுகை), ஏ.பி.பிரபாவதி (நீலகிரி), ஏ.ராணி (திருப்பூர்), எம்.மரகதம் (நாகை), திருமாமகள் (தஞ்சை), மாநிலச் செயலாளர்களாக கே.ஜெயலெட்சுமி (கிருஷ்ணகிரி), எஸ்.தெய்வாத்தாள் (கோவை), பி.அமுதா (திருவள்ளூர்), பரமேஸ்வரி (திருவாரூர்), கே.தேவிகா (கரூர்), விஜயராணி (கள்ளக்குறிச்சி), மாநிலத்தணிக்கையாளர்களாக எஸ்.மகேஸ்வரி (நீலகிரி), பாஸ்கர்வள்ளி (திருவாரூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நாகை மாவட்டம் வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியரிடம் அத்துமீறிய நபரைக் கைது செய்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களிலும் மற்ற அலுவலகங்களிலும் அச்சமின்றிப் பணியாற்றிட செவிலியர்கள்,பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைரத்து செய்ய வேண்டும். ஊதியக் குழுநிலுவைகளை உடனே வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் டி.வாசுகி நிறைவுரையாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் பா.ராணி நன்றி கூறினார்.
 

;