tamilnadu

img

தேனியில் தாண்டவமாடும் கொரோனா.... அரசு சிறப்பு அதிகாரி கார்த்திக் ஐஏஎஸ் எங்கே?

தேனி:
தேனி மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட சிறப்புஅதிகாரி கார்த்திக் ஐ.ஏ.எஸ்., தேனி மாவட்டத் திற்கு இன்னும் வந்துசேரவில்லை. கொரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து புதன்கிழமை நிலவரப்படி 400 க்கு மேல்அதிகரித்துள்ளது. ஓடைப்பட்டி முத்துலாபுரம், சின்னமனூர், பெரியகுளம், கைலாசபட்டி, போடிஆகிய இடங்களில் சமூகப் பரவலாகி பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் கள், அடிப்படை வசதியின்றி தவித்து வருகிறார்கள். கழிப்பறையைக் பராமரிக்க முடியாத நிலைஉள்ளது. வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆட்சியர் அலுவலகமே பரபரப்பாக இருந்த சூழலில் ஆட்சியர்பல்லவிபல்தேவ் தனது அறையை அழகுபடுத்துவதில் தீவிரம் காட்டி வந்ததாக புகார் எழுந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சின்னமனூர், போடி, கம்பம் வடக்கு காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா எச்சரிக்கையை ஆட்சியர் அலுவலகம் அலட்சியம் செய்ததால் தொற்று ஏற்பட்டு ஆட்சியர் அலுவலக முதல் தளம் மூடப்பட்டுள்ளது. 

உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு அலுவலக உதவியாளர் உள்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஒருவருக்கும், அல்லிநகரம் தலைமைக் காவலர் ஒருவருக்கும், தேனி ரத்தினம் நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் புதனன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 65-க்கு குறைவில்லாமல் அதிகரித்து வருகிறது. ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொற்று பரவாமல் தடுக்க துறை அதிகாரிகளை ஒருங்கிணைப்பதில் அக்கறை காட்டவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றுநடவடிக்கை எடுப்பதில்லை. தேனி அரசு மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்து நோயாளிகளின் குறைகளை கேட்பதில்லை. இதனால் தேனி மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை விதித்து தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுநகராட்சிகளுக்கு கிட்டத்தட்ட முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மளிகைக்கடை, காய்கறி கடை, டீ கடை, உணவகங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன. டாஸ்மாக் கடைக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு விதிக்கவில்லை.இந்நிலையில் கடந்த வாரம் தேனி மாவட்டத்திற்கு மாநில நெடுஞ்சாலை துறைச்செயலாளரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான கார்த்திக் நியமிக்கப்பட்டார். ஒரு வாரம் கடந்த நிலையில் சிறப்பு அதிகாரி தேனிக்குவந்து தடுப்பு நடவடிக் கையில் ஈடுபடாததுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட பணிக்கு வராத கொரோனாதடுப்பு சிறப்பு அதிகாரியை உடனடியாக வரவழைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட துணை முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத் திற்கு தனியாக ஒரு அமைச்சரை நியமித்து கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                   (ந.நி)

;