tamilnadu

img

புளியங்குடியில் 2 குழந்தைகள் உள்பட 5 பேருக்கு கொரோனா

தென்காசி: 
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் மாவட்டத்தில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதித்திருந்த நிலையில் தற்போது பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.குறிப்பாக மாவட்டத்தின் முக்கிய நகரான புளியங்குடியில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது. அங்கு ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதித்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் திங்கள் நிலவரப்படி 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 23 பேர் புளியங்குடி சேர்ந்தவர்கள் ஆவர். புளியங்குடியில் குறிப்பிட்ட 3 தெருவை சேர்ந்தவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புளியங்குடி பகுதி முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்தோருடன் தொடர்பில் இருந்த 63 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு மாதிரி சேகரிக்கப்பட்டது.

அதில் 2 குழந்தைகள், 2 ஆண், ஒரு பெண் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது செவ்வாயன்று வர  நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதன்மூலம் புளியங்குடி பகுதியில் கொரோனா பாதித் தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
 

;