tamilnadu

img

மிகவும் கொடூரமானது புதிய கல்விக் கொள்கை இயக்குநர் வ.கௌதமன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி:
நீட்டை விட கொடூரமானது புதிய கல்விக் கொள்கை; பல லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பை தாண்ட முடியாது என திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் குற்றம்சாட்டினார்.தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் “கோவில்பட்டி நகரம் என்பது கடலை மிட்டாய்க்கு பெயர் போனது. இந்நகரில் ஓடைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர், துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கேட்கவில்லை என்றால் கடுமையான அறவழி உக்கிரமான போராட்டம் நடைபெறும்” என்றார்.

நீட் தேர்வால் அனிதா முதல் கீர்த்தனா வரை 9 பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். தமிழகத்தில் மட்டும்தான் 6300க்கு மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன. ஆனால் அரசு பள்ளியில் பயின்ற ஒரே ஒரு மாணவன் மட்டும் தான் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு சென்று உள்ளார். 2500 இடங்களில் கூட தமிழக மாணவர்கள் செல்ல முடியவில்லை. 3500க்கும் மேற்பட்ட வடமாநில பிள்ளைகள் இங்கு வந்து மருத்துவம் படிக்கிறார்கள். இதே நிலை பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரியில்  வர போகிறது. 

நீட் ஒரு ‘எமன்’ என்றால் அதைவிட பல நூற்றுக்கணக்கான மடங்கு ஒரு பெரு எமன் புதிய கல்விக் கொள்கை, இந்தக் கல்விக் கொள்கையால் பத்தாம் வகுப்பு கூட தாண்ட முடியாமல் பல லட்சக்கணக்கான பிள்ளைகள் படிப்பு மறந்து வேலையில்லாத வாழ்வியல் சூழல் ஏற்படும்.புதிய கல்விக் கொள்கை என்பது நீட்டை விட கொடூரமானது. இவை அத்தனையையும் இந்த மண்ணை விட்டு அப்புறப்படுத்த மண்ணை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் தங் கள் உறுதியான செயல் திட்டத்தை கையில் எடுத்து செய்து முடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

;