tamilnadu

img

‘கம்யூனிஸ்ட் மீராஷா’ காலமானார்

திருநெல்வேலி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச்  செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்  விடுத்துள்ள இரங்கல் செய்தி  வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பாளையங் கோட்டை இடைக்கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டக்குழு உறுப்பினருமான மீராஷா உடல்நலக் குறைவால் வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 60. 
தோழர் மீராஷா, பீடி நிறுவன அலுவலக தொழிலாளி. 1985களில் பீடித்தொழிலாளர், போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியவர். குறிப்பாக செய்யது பீடிக் கம்பெனி மற்றும் காஜா பீடிக் கம்பெனி நிர்வாகங்களின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக தொழிலாளர் நல உரிமைகளுக்கான போராட்டங்களில் முன்னணியில் நின்றவர். அதற்காக கைதாகி 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டவர். பீடித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாக நீண்டகாலம் செயல்பட்டவர். 1986ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். மேலப்பாளையம் பகுதி மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் முன்னணியில் நின்று செயல்பட்டவர். இவரது மனைவியும், கட்சி உறுப்பினருமான தோழர் சகர்பாணு 2006 முதல் 2011 வரை திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரானஷாகின்பாக் போராட்டத்தை மேலப்பாளையத்தில் 60 நாட்கள் இடைவிடாமல் நடத்தியவர் தோழர் மீராஷா. மேலப்பாளையம் மக்களால் அன்போடு ‘கம்யூனிஸ்ட் மீராஷா’ என்று அழைக்கப்பட்டவர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டப் பொருளாளராகவும் செயல்பட்டு வந்தார். தோழர் மீராஷா  மரணம் இடதுசாரி இயக்கத்திற்கும், மேலப்பாளையம் பகுதி மக்க ளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு செவ்வணக்கத்தை தெரிவிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.  

தலைவர்கள் அஞ்சலி
அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, எம்.சுடலை ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பா.வரகுணன், எஸ்.பெரு மாள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தோழர் மீராஷாவின் உடல் செங்கொடியால்  போர்த்தப்பட்டது.

இரங்கல்
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது, பொதுச்செயலாளர் எம். ராமகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:  திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் அனைத்து பகுதி மக்களின் நட்புக்குரிய தலைவராக வாழ்ந்து வந்தவர் ஏ.எம்.மீராசா. அப்பகுதியில் சமூகநல்லிணக்கத்தை பேணிக்காப்பதில் முன்னணியில் நின்று பணியாற்றியவர். சமீபத்தில் நடைபெற்ற குடியுரிமைதிருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில்அனைத்துகட்சி- அனைத்து அமைப்புகள்-அனைத்து ஜமாத் கூட்டமைப்பின்ஒருங்கிணைப்பாளராக தலைமை ஏற்று பணியாற்றியவர்.கொரோனா தொற்றுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் தேவை களை பூர்த்தி செய்வதிலும் முன்னணியில் இருந்து பணியாற்றினார். திடீரென ஏற்பட்டஉடல் நலக் குறைவால் அவர் மரணம்அடைந்தார். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழுவுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

;