tamilnadu

சிபிஎம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்: த.வெள்ளையன்

சென்னை, ஏப். 16-அந்நிய ஆதிக்கத்தை முறியடிப்போம், உலக வர்த்தக ஒப்பந் தத்திலிருந்து இந்தியாவை விடுவிப்போம் என்று முன்வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குஇந்தத் தேர்தலில் வாக்களிப்போம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறினார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் தேர்தல்களில் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு வாக்களிக்கிறோம். ஆனால் சமீபத்திய தேர்தல்களில் மக்களின் இந்த ஜனநாயக நம்பிக்கை சிதைக்கப்பட்டு வருகிறது. அரசியல் அடிப்படையிலான மூடநம்பிக்கை, சாதி, மத வெறித்தனங்கள், பணபலம் ஆகியவையே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இப்படி வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோர் நம் மக்களின் வாழ்வாதாரம் பறிபோவது பற்றி சற்றும் கவலைப்படாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நம் நாட்டு ஏகபோக நிறுவனங்கள் வளர்ச்சி பெறவே பயன்படுகின்றனர்.1991-ல் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்த பிறகே இந்த அவலநிலை. நம் நாட்டு சில்லரை வணிகத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர் பிறகு நம் நாட்டையும் கைப்பற்றினர்.


ஆயிரக்கணக்கானோர் போராடியும், உயிர்நீத் தும்தான் நாடு விடுதலை அடைந்தது. மீண்டும் வணிகம் செய்ய அந்நியருக்கு 100 விழுக்காடு அனுமதி. சில்லரை வணிகத்தை மொத்தமாக அந்நியரே கைப் பற்றிக் கொள்ள ஆன்லைன் வணிகத்துக்கு அனுமதி. தொலைத்தொடர்பு, வங்கி, ரயில்வே, காப்பீட்டுத் துறை போன்ற பொதுத்துறைகளிலும் அந்நியர் அனுமதி. உடல் நலத்துக்கு கேடு, விளைவிக்கும் பாமாயில், கோக், பெப்சி போன்றவற்றுக்கு அனுமதி. விதைக்கும் மண்ணையும், உண்ணும் மக்களையும் மலடாக்கும் மரபணு மாற்று விதைகள் இறக்குமதி செய்ய அனுமதி. இப்படி எண் ணற்ற அவலங்கள். இதற்கெல் லாம் காரணம் உலக வர்த்தக ஒப்பந்தம்.சில்லரை வணிகம் மற்றும் அனைத்து துறைகளிலும் வேரூன்றி வரும் அந்நிய ஆதிக்கத்தை முறியடிப்போம். இதற்கெல்லாம் காரணமான உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நம் நாட்டை விடுவிப்போம் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தரவேண்டும் என்று அரசியல் கட்சிகளைக் கேட்டிருந்தோம்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அந்நிய ஆதிக்கத்தை முறியடிக்கவும், சில்லரை வணிகம் காக்கவும் உறுதி அளித்து எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளது.மற்ற கட்சிகளுக்கு அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கும் துணிவு இல்லை போலும். ஒரு சில மாநில கட்சிகள் அகில இந்திய கட்சிகளுக்கு கட்டுப்பட்டதாக உள்ளன. ஒரு சில அகில இந்திய கட்சிகள் பணக்கார நாடுகளுக்கு கட்டுப்பட்டதாக உள்ளன. எனவே, இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பது என்று எங்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவு செய்திருக்கிறது. எமது பேரவையின் 35 ஆண்டுகால வரலாற்றில் எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்தது இல்லை. ஆனால் எங்கள் கோரிக் கையை ஏற்றுக் கொண்ட, அதற் காக போரடி வருகிற மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

;