tamilnadu

img

2.33 லட்சம் வாக்காளர்கள் பெயர், முகவரிகள் சரிபார்ப்பு

சென்னை:
வாக்காளர் பட்டியலை வாக்கா ளர்களே சரிபார்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்களது பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், வாக்கா ளர் பட்டியலில் 18 ஆயிரம் பேர் பெயர்திருத்தம் செய்துள்ளனர்.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக மகளிர் திட்ட மேலாண்மை இயக்குநருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும். தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த இரண்டு பேருக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து, மற்ற ஊழியர்களின் பெயர்களை திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

;