tamilnadu

img

தமிழகத்திற்கு மத்திய அரசு 510 கோடி ரூபாய் ஒதுக்கீடு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை, ஏப். 5- முதற்கட்டமாக தமிழகத்திற்கு மத்திய அரசு 510 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழகத்தை காக்க முதல்வர் வரும் முன் காப்போம் என்கிற அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நோய் தொற்றை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தேவையான நிதியையும் ஆலோசனையையும் முதல்வர் அளித்து வருகிறார். 500 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்படும் என்கிற அடிப்படையில் 451 கோடிக்கு மேல் பணிகள் தோய்வின்றி நடைபெற ஒதுக்கீடு செய்துள்ளார் இதுவரை 11 கூட்டங்கள் நடத்தி அறிவுரைகளை ஆலோசனைகளை வழங்கி மக்களை சமூக தொற்றிலிருந்து பரவாமல் பாதுகாக்கும் முயற்சியில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம் விலகி இருக்க வேண்டும் , விழிப்போடு இருக்க வேண்டும் , வீட்டில் இருக்க வேண்டும் . என்கிற முதல்வரின் கோரிக்கையை நாமும் பொதுமக்களிடம் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

6 மணிமுதல் 1 மணி வரை மார்க்கெட்க்கு நேர கட்டுப்பாடு விதித்திருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. அஜாக்கிரதையால் இந்த நோயின் தன்மை அறியாமல் சிலர் செய்கின்ற தவறுகள் இல்லாமல் அனைவரும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும். 45,000 முதல் நிலை மீட்பாளர் பயிற்சி பெற்ற இளைஞர்கள் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.  ஊரடங்கின் போது ஏழை எளிய மக்கள் 21 நாட்களை சமாளிக்கும் போது ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் நேரடியாக சென்று பொருட்களை வழங்கவும் , 1000 ரூபாய் வழங்கவும் இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதற்கட்டமாக தமிழகத்திற்கு மத்திய அரசு 510 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் பாதுகாப்புக்காகவே எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

;