tamilnadu

img

தனிமை வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்

சென்னை,மார்ச் 28- கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த ஆயிரக்கணக்கானோரும், கொரோனா அறிகுறி தென்படுவோரும் தனிமையில் வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமை வார்டுகளின் தேவை அதிகரித்துள்ளதால் ரயில் பெட்டிகளில் தனிமை வார்டுகள் அமைக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் நடுப்படுக்கைகள், எதிர்ப்புறம் உள்ள படுக்கைகள், ஏணிகள் ஆகியவற்றை நீக்கித் தனிமை வார்டுகள் அமைக்கப்படுகின்றன. ரயில் பெட்டி தனிமை வார்டுகளை இருப்புப் பாதையுள்ள எந்த இடத்துக்கும் விரைவாகக் கொண்டுசெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

;