tamilnadu

வடமாவட்டங்களில் இன்று  கடும் அனல் காற்று வீசும் 

 சென்னை,ஜூன் 16 சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடும் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரி வித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, வெப்பச் சலனம் காரணமாக, சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்க ளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணா மலை கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவும் என்றும், தீவிர அனல் காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

;