tamilnadu

img

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள்: மத்திய அரசுக்கு ஜூலை 6 வரை அவகாசம்

சென்னை:
ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் ஜூலை 6 வரை அவகாசம் அளித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக விமல் மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக் கள் நடத்த தடை விதிக்கவேண்டும், 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன் லைன் வகுப்புக்களை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, ஆன் லைன் வகுப்புக்களில் பங்கேற்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் கண்பாதிப்பு குறித்து 25 ஆம் தேதி அறிக்கை அளிக்க , அரசு கண் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். 

அதன்படி இவ்வழக்கு வியாழனன்று (ஜூன் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஜூலை 6 வரை நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை முதல்வர் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் அளித்தும் வழக்கு ஒத்திவைக்கப் பட்டது

;