tamilnadu

img

ரத்த உறவுகளாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் மே தின பொதுக்கூட்டத்தில் டி.கே. ரங்கராஜன் பெருமிதம்

சென்னை, மே. 2-வடசென்னை மாவட்டத் தில் நடந்த மேதின ஊர்வலம் ஐசிஎப் பேருந்து நிலையத்திலிருந்து ஏஐடியுசி, சிஐடியு உடன் இணைக்கப் பட்ட சங்கங்கள் தங்கள் கோரிக்கை பதாகைகளுடன் புறப்பட்டு வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணகான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.பின்னர் நடை பெற்ற பொதுக் கூட்டத்திற்கு சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.சரவணன் (ஏஐடியுசி) வரவேற்றார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.குப்புசாமி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஆர்.மணிமேகலை, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மு.சம்பத், தலைவர் எஸ்.குப்பன் ஆகியோர் பேசினர்.இதில் பங்கேற்ற டி.கே. ரங்கராஜன் பேசுகையில், “ஆஎஸ்எஸ் அமைப்பு தங்கள் பிரிவுகளை பல்வேறு வடிவங்களில் விஸ்தரித்துக் கொண்டு வருகிறது” என்றார்.செங்கொடி மட்டுமே தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இதை எங்களால் தைரியமாக சொல்ல முடியும். மத்திய அரசின் மோசமான தொழிலாளர் விரோத கொள்கை தொழிற்சலைகள், சிறு குறுந் தொழில்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டி ருக்கிறது என்றும் அவர் கூறினார்.ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தை பாதுக் காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பல்வேறு மதத்தினர் இங்கு இருந்தாலும் ரத்த உறவுகளாக பழகிக் கொள்ளும் கலாச்சாரம் தமிழகத்தில் உள்ளது. சக மனிதர்களை நேசிக்கும், சகோதர மனப்பான்மை யோடும் பழகும் மக்கள் தமிழ்நாட்டு மக்கள் என்றும் டி.கே.ஆர். பெருமிதம் கொண்டார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “பிச்சை புகினும் கற்கை நன்று என்று ஒளவையார் கூறினார். ஆனால் முதல் வகுப்பில் நுழைவதற்கே நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவல நிலை தொடர்கிறது” என்றார்.

;