tamilnadu

img

ஒரே நாளில் ரூ.171 கோடிக்கு மது விற்பனை 

சென்னை:
தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்தவகையில் இன்று  தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.இதனால் சனிக்கிழமை ஏராளமானோர் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் சனிக்கிழமை (ஜூலை 4)மட்டும் ரூ. 171 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.அதிகபட்சமாக மதுரையில் ரூ.40 கோடிக்கும், திருச்சியில் ரூ.38 கோடிக்கும், சேலத்தில் ரூ.37 கோடிக்கும், கோவையில் ரூ.34 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. குறைந்த பட்சமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.20 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.சாதாரணமான வார இறுதிநாட்களில் ரூ.20 முதல் 140 கோடி வரை மதுவிற்பனையாகும். ஆனால் சனிக்கிழமை ரூ.171 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

;