tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் ரூ.7,500 வழங்குக... பஞ்சாயத்து அலுவலகங்கள் முன்பு மே 12 மனு அளிக்கும் போராட்டம்

சென்னை:
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை யாக அமலில் உள்ள ஊரடங்கலால் வேலையிழப்பு, வருமானம் இழப்பு இவைகளினால் வறுமையில் விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் வாடுகிறது. பாதுகாக்க ஆட்சியாளர்கள் நிவாரண நிதியும் நூறுநாள் வேலைத்திட்டத்தினையும் வழங்கக்கோரி மே 12ஆம் தேதியன்று ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மனு அளித்து விலகல் தன்மையுடன் போராட்டத்தை நடத்துவதென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள செய்தி: 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள்கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென மக்களை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது நான்காவது கட்டமாகவும், இந்த ஊரடங்கை நீடித்துள்ளது. நாடு முழுவதும் அன்றாடம் உழைத்து வாழும் கிராமப்புற மக்கள் உள்ளிட்ட உழைப்பாளிகள், கடந்த 45 நாட்களாக கொடுமையான வறுமையிலும், துயரத்திலும் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களை கொரோனா வைரஸ் கொல்லுவதற்கு முன்பாக பசி அவர்களை கொன்று விடும் சூழல் உருவாகியுள்ளது. வறுமையில் வாடும் மக்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மாநிலஅரசு ரூ.1000 நிவாரணம் அளித்துவிட்டு இதை வைத்து மாதக்கணக்கில் பிழைப்பு நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது. வேலையும் வருமானமின்றி வாரத்தில் ஓரிரு நாட்களில் கிடைக்கும் வருமானத்தின் மூலம்ஏற்கெனவே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர் களுக்கு ஊரடங்கால் அதுவும் இல்லாமல் போனதனால் நிலைமை மிக மோசமடைந்து நிர்க்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த ரூ.1000 தான் நிரந்தரத் தீர்வாக மாநில அரசு கருதுகிறது.விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. விவசாயத் தொழிலாளர் களுக்கு சமூக இடைவெளியுடன் ஊரக வேலையுறுதித் திட்டத்தை அமல்படுத்துங்கள், ஓரளவாவது வருவாய் கிட்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக எம்.என்.ஆர்.ஜி.ஏ. வேலையை துவங்குகிறோம் என்று அரசு அறிவித்தது. ஆனால் அது முழுமையாக தமிழ்நாடு முழுவதும் அமலாகவில்லை. நிவாரணமும் வேலையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தன்மையில் உடனே வழங்க வேண்டும், மக்களை வெறும் வாய்ச்சொல்லால் மீண்டும் மீண்டும் ஏமாற்றக் கூடாது. தொடர்ந்து அரசு கால தாமதப்படுத்துவதினால் அரசு சொன்னதை அரசே நிறைவேற்றிடக்கோரி மே 12ஆம் தேதி பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு முன்பு சட்டத்தையும் மதித்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்று விலகல் தன்மையுடன் ஐந்து ஐந்து பேராகச் சென்று இருக்கும் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்குவது என்று நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்
விவசாயத் தொழிலாளர் குடும்பங் களுக்கு வேலை இழந்த 45 நாள் காலத்திற்கு ரூ.7,500 ஒவ்வொரு குடும்பத் திற்கும் வழங்கிட வேண்டும்.

ஊரக வேலைத்திட்டத்தில் நிபந்தனை களின்றி அட்டை வைத்துள்ள அனை வருக்கும் வேலை வழங்கிட வேண்டும். அத்தோடு 30 நாட்களுக்கான தினக்கூலியை முன்கூட்டியே வழங்கிட வேண்டும்.

30 கிலோ அரிசி மற்றும் சமையல் பொருள் அனைத்தும் கொரோனா காலம் நீடிக்கும் வரை வழங்கிட வேண்டும். 

கிராமங்களில் அங்கன்வாடி மையங்கள் மூலம் முதியோர்கள், வேலை செய்ய இயலாதவர்கள், குடும்ப அட்டை இல்லா தவர்கள் உட்பட அனைவருக்கும் உணவு சமைத்து வழங்கிட வேண்டும்.

கிராமப்புறங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைத்திட வாகன ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

சட்டக்கூலி ரூ.258ஐ நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் அனை வருக்கும் கிடைத்திட அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். குழுக்களாக பிரித்து விலகல் தன்மையுடன் அப்பணிகள் வழங்கிடும் போது பாதுகாப்பு உப கரணங்கள் அனைவருக்கும் பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட வேண்டும்.

மேற்பட்ட இந்த கோரிக்கைகளை அரசு அறிவித்துள்ள அடிப்படையில் இதுவரை அமல்படுத்தப்படாததினால் அமலாக்கக்கோரி மே 12ஆம் தேதி சமூக இடைவிலகல் தன்மையுடன் மனுக்கள் அளிக்கும் போராட்டத்தை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

;