tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறுக! தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் வலியுறுத்தல்

சென்னை,மார்ச் 8- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற  வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் நாடு  நல்வாழ்வு இயக்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலை வர் மருத்துவர் சீ. ச. ரெக்ஸ் சற்குணம்,செயலாளர் ஞானகுரு ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதி வேடு குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகும். குடியுரிமை சட்டம் 1955-யின் கீழ் நடைபெறும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளுக்கும், சென்சஸ் சட்டம் 1948-ன் கீழ் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவை இரண்டையும் இணைத்து நடத்தக் கூடாது.  குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பான மதச் சார்பற்ற கோட்பாட்டிற்கு எதிரானது. இந்திய அரசமைப் புச் சட்டத்தின் சமத்துவ கோட்பாட் டிற்கு, மதச் சார்பற்ற கட்ட மைப்பிற்கு எதிரானது. எனவே, கேரளா மாநில அரசு உட்பட பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்தியா முழுக்க இச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. குடியுரிமைச் சட்டம் 1955, 2003-லும் 2019லும் திருத்தப்பட்டுள்ளது.  இத்திருத்தங்களில் கூறப்பட்டுள்ள கூறுகள் மக்கள் மனங்களில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது. பதட்டமான சூழலில் வழக்கை விசாரிப்பதே கடினம் என்று உச்ச நீதிமன்றம் கூறி யுள்ள சூழலில், மக்கள் மனங்களில் உருவாகியுள்ள பதட்டத்தையும் அச்சத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அரசு தன்னிச்சை யாக ஒரு முடிவை எடுத்து நடை முறைப்படுத்த முயல்வது மக்க ளாட்சி மாண்புகளுக்கு எதிரானது.  எனவே,  2020 ஏப்ரல் 1 முதல் நடத்த திட்டமிடுவது நியாய மற்றதும் மக்களை ஏமாற்றக் கூடியதுமாகும். இத்தகைய போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை இணைத்து நடத்த இயலாது என்பதை திட்டவட்டமாக மத்திய அரசிற்கு தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த பணிகணை தமிழ்நாட்டில் உடனடியாக நிறுத்த அரசா ணையை வெளியிட வேண்டும்.  மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021க்கான வீடு கணக்கெடுப்பு மட்டும், சென்சஸ் சட்டம் 1948 கீழ், 2020 ஏப்ரல் 1 முதல் நடத்த வேண்டும். அதற்குரிய கேள்விகள் மட்டுமே மக்களிடம் கேட்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.  இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

;