tamilnadu

img

ஓ.பி.எஸ். மகனை தகுதி நீக்கம் ...

ஒரு சந்திப்பை நடத்தியிருக்கிறார். அதிலும் அவர் பேசவில்லை.


தகுதி நீக்கம்?

தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கோவில் கல்வெட்டில், தேனி தொகுதிஅதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சரின் மகனுமான ரவீந்திரநாத் எம்.பி என வைத்துள்ளனர். வாக்குபதிவே முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. ஆனாலும் எம்.பி., என போட்டுக் கொள்கிறார்கள்.


இதை தேர்தல் ஆணையம் எப்படி வேடிக்கை பார்க்கிறது. ரவீந்திரநாத்தை தகுதிநீக்கம் செய்ய இது ஒன்றேபோதுமானது. பொன்பரப்பியில் மறுவாக்கு பதிவு கோரினால் நடத்த மறுக்கிற தேர்தல்ஆணையம், தேனியில் கேட்காமலே நடத்துகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களைஅங்கு கொண்டு செல்கிறது. இவையெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. எம்.பி., என்று போட்டுக் கொள்ளும் அளவுக்கு நம்பிக்கை தரத்தக்க வகையில் மோசடி செய்துள்ளனர். அதற்கு தேர்தல் ஆணையம் துணைபோயிருக்கிறது.

ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு வாக்கு சீட்டு சென்று சேரவில்லை. மோசடியான தேர்தலாக இதை மாற்றிவிடுவார்களோ என்றஅச்சம் உள்ளது. மக்களின்வாக்குகளை மோசடி மூலம்தான் நிர்மூலமாக்குவதற்கான முயற்சிதான் அந்த கல்வெட்டு.


விழிப்புணர்வு பிரச்சாரம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 5-10வரை அனைத்து ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளோம். கெயில் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறது. தரங்கம்பாடி போன்ற இடங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுப்பது, அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகிறோம். காவிரிமண்டலத்தை பசுமை மண்டலமாக பாதுகாக்க வேண்டும். பிற அமைப்புகளை ஒருங்கிணைத்து அடுத்தடுத்து போராட்டம் நடத்துவோம்.


மோடியின் கைப்பாவை

மோடி, அமித்ஷா மீதானபுகார்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம்தான் மோடிக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தொடர்ந்து ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளார். சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.வாக்கு பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் எழுந்தபிறகுதான் ஒப்புகை சீட்டு எந்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதை முழுமையாக அல்லது 50 விழுக்காடு எண்ணுவதில் என்ன பிரச்சனை? தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடியின் கைப்பாவையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக அரசு மெத்தனம்

கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, “ சாதிய கொடுமைகளுக்கு தீர்வுகாண தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அனைத்து கட்சி,அமைப்புகளின் கருத்துக்களை கேட்டு தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சாதிய கொடுமை பிரச்சனையில் மெத்தனமாக செயல்படுகிறது” என்றார்.


இச்சந்திப்பின்போது மனித உரிமை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.செல்வா, உறுப்பினர்கள் லலிதா, ஆர்.முரளி, எஸ்.குமார், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

;