tamilnadu

img

நவ. 28 பெட்ரோலிய தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு ஆதரவு

சென்னை:
பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களை  தனியாருக்கு விற்பதை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. பெட்ரோலிய நிறுவனங்களை  தனியாருக்கு விற்பதைக் கண்டித்து நவம்பர் 28 அன்று பெட்ரோலிய தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியில் பாஜக  அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதிலேயே குறியாக உள்ளது. துவக்கத்தில் நட்டமடையும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்று நிறுவனங்களின் பட்டியலை தயாரித்தது. அவைகளை வாங்குவதற்கு ஆளில்லாத காரணத்தினால் தற்போது லாபம் ஈட்டும் நிறுவனங் களை விற்பது என்று முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் சீர்குலைந்து வரும் வேளையில் நிதி ஆதாரத்தை தேடி அலைகின்றது. பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் கண் பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் பக்கம் திரும்பியுள்ளது.

பிபிசிஎல் சொத்துக்கள்
நா
ன்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆண்டிற்கு 383 லட்சம் டன் சுத்திகரிப்பு செய்கின்றது.77 பெரிய அளவிலான சேமிப்பு நிலையங்கள்,55 எல்பிஜி பாட்டலிங்பியாண்டுகள், 2241 நீளமுள்ள எண்ணெய்எடுத்துச்செல்லும் குழாய், 56 விமானங் களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், 4 லூப்ரிகேண்ட்ஸ் நிலையம்,குடோன், துறைமுகத்தில் எண்ணெய் இறக்கவும் ஏற்றுமதி செய்வும் ஆன ஏற்பாடுகள் போன்ற துணை நிலையங்கள் என்ற அளவில் 22 பல கம்பெனிகளில் பிபிசிஎல் பங்குகள் இந்தியா முழு வதும் உள்ளன. இந்தியா முழுவதும் எண்ணெய் சந்தையில் 24 சதவீத பங்குகளை வைத்துள்ளது. 15078 பெட்ரோல் பங்க்குகள், 6004 எல்பிஜி விநியோகஸ்தர்கள் உள்ளனர். அடுத்து வரும் காலங்களில் உலகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது. ரூ. 48182 கோடி அளவிலான புதிய திட்டங்கள் நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆண்டுக்கு 60 லட்சம் டன் அளவில் விரிவாக்கம் நடந்து வருகின்றது.லாபம் ஈட்டி (வரிக்கு பின் )வந்தது. 2014-15இல் 5085 கோடி ரூபாய் ,2015-16 இல் 7056 கோடிரூபாய் , 2016-17 இல் 8039 கோடி ரூபாய்,2017-18 இல் 7134 கோடி ரூபாய்.மத்திய அரசிற்கு லபாத்தில் பங்காக  ரூ. 15 ஆயிரம் கோடி நான்காண்டுகளில் அளித்துள்ளது. 96 ஆயிரம் கோடி ரூபாய்வரியாக செலுத்தியுள்ளது.சேமிப்புத் தொகை 34.4 ஆயிரம் கோடி ரூபாய். இரண்டு லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு இன்றைய மதிப்பின்படி உள்ளது.

எச்பிசிஎல்
ஆண்டுக்கு 180 லட்சம் டன் எண்ணெய் சுத்திகரிப்பு, 15127 பெட்ரோல் பங்க்,22 சதவீத சந்தை, 3 லட்சம் கோடி ரூபாய் வருமானம்.லாபம்வரிக்கு பின்னர் 7128 கோடி ரூபாய், மத்தியஅரசின் ஆணைப்படி ஓஎன்ஜிசியை கட்டாயப்படுத்தி 51.1 சதவீத பங்குகளை அதிகமான விலைக்கு அதாவது 36915 கோடிரூபாய்க்கு வாங்கவைக்கப்பட்டது.இந்த மத்திய அரசின் கையை முறுக்கும் வேலையினால் ஓஎன்ஜிசி நிறுவனம் கட்டாயமாக 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி பங்குகள் வாங்கப்பட்டது. ஓஎன்ஜிசி நிறுவனமும் நிதிப்பிரச்சனையில் தள்ளாடுகின்றது.பாஜக எப்பொழுது ஆட்சிக்கு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் பொதுத்துறை நிறுவனங்களை அடியோடு விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. 2002 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த பொழுது எச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களை விற்பதற்காக முடிவு செய்தபொழுது அந்நிறுவனங்களின் தொழிலாளர்கள் வலுவான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். உச்சநீதிமன்றத்தில் பெட்ரோலியம் சார்ந்த சங்கங்கள் மனுச்செய்த அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்தது.அதன்படி நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்நிறுவனங்களை விற்கக்கூடாது என்றுதீர்ப்பாகியது. ஆனால் பாஜக தனக்கு இருக்கும் நாடாளுமன்ற வலுவில் தற்போது அச்சட்டத்தைதிருத்தி நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்று ஆக்கிவிட்டது.இந்நிறுவனங்களை இந்திய நாட்டு முதலாளிகளும் அந்நிய நாட்டு முதலாளிகளும் போட்டியில் நிற்கின்றனர். பிபிசிஎல் நிறுவனத்தை வெறும் 68 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பது என்று முடிவு எடுத்துள்ளது என்பதில்முதலாளிகளின் விசுவாசம் தெரிகின்றது.  தனியாருக்கு சென்றால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இட ஒதுக்கீடு இருக்காது. மானியம் ரத்து ஆகிவிடும். தனியார் நிறுவனங்களே எண்ணெய் சந்தையை கட்டுப்படுத்துவார்கள். தற்போது ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலை தாறமாறாக உள்ளது. தனியாரிடம் ஏகபோகமாகச் சென்றால் அவர்கள் வைத்ததுதான் சட்டம் ஆகும். 

மத்திய பாஜக அரசின் இந்த கொள்கையை கண்டித்தும் நாட்டின் பொதுத்துறைகளை பாதுகாக்கின்ற வகையில் பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் நவம்பர் 28 அன்று நாடுமுழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பொதுத்துறையை பாதுகாக்கும் இப்போராட்டத்திற்கு சிஐடியு தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;