tamilnadu

img

சிஏஏ போராட்டங்களை கண்காணிக்க  6 அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு

 சென்னை, பிப்.16 தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி  திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், முஸ்லிம் இயக்க நிர்வாகிகளை வண்ணாரப்பேட்டையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கைது செய்யப்பட்ட 120 பேரையும் விடுவிப்பதற்கு ஆணையர் சம்மதித்தார். உடனடி யாக கைது செய்யப்பட்ட 120 பேரும் விடு விக்கப்பட்டனர். இதையடுத்து போராட்ட ங்களை கைவிடுவதாக முஸ்லிம் இயக்கத்தினர் அறிவித்தனர். இதன் விளைவாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம் இயக்கத்தினர் போராட்டத்தைக் கைவிட்டனர். இதற்கிடையே வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் முஸ்லிம் இயக்கத்தி னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து தமிழகத்தில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நீடித்து வருகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கு பாது காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரி களை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தர விட்டுள்ளார். திண்டுக்கல்லுக்கு ஜி.ஸ்டாலின், தேனிக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன் மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலர், டிஜிபியுடன் முதல்வர்  ஆலோசனை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம்
நடைபெற்று வரும் நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
யுடன் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை
பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ
நாதன் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் தமிழக டிஜிபி திரிபாதி ஆலோசனை நடத்தினார்.

;