tamilnadu

முதுநிலை ஆசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு பெயர்ப்பட்டியல் வெளியீடு

சென்னை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு செப்டம்பர்  27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 594  பட்டதாரிகள் முதல்முறையாக கணினிவழியில் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பாடங்கள்வாரியாக மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 3,824 பேர்களின் பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

;