tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை....

சென்னை:
கொரோனா காலத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாக்கவும், நிவாரணம் வழங்கவும், அதீத அபராதம் மற்றும் பணியிட பிரச்சனைகள் மீது தமிழக அரசும், நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்மேளனத்தின் சார்பில் ஊழியர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஆகஸ்ட் 4ம் தேதி மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஊழியர்களது பிரச்சனைகள்  மற்றும் கோரிக்கைகள் குறித்து மேலாண்மை இயக்குனர்  பொதுமேலாளர் (நிர்வாகம்) தலைமையில் பேச்சுவார்த்தைக்கான குழு அமைத்து,  பேச்சுவார்த்தையில் பங்கேற் கும்படி சம்மேளனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி புதன்கிழமை  (ஜூலை 29)  சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் பேச்சு நடைபெற்றது.இக்கூட்டத்தில் பொதுமேலாளர் (நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலன் பொறுப்பு) சென்னை முதுநிலை மண்டல மேலாளர், சென்னை மத்திய மாவட்ட மேலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.சம்மேளனத்தின் சார்பில் துணை பொதுச்செயலாளர் கே.பி.ராமு, சென்னை செயலாளர்  (பொறுப்பு) S.வடிவேலு மற் றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சம்மேளனத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும், அவசியத்தையும் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

கூட்ட முடிவில் பொதுமேலாளர் நாம் வைத்த கோரிக்கைகளை மேலாண்மை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முயற்சிப்பதாக கூறினார்.இதனை சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.

;