tamilnadu

img

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்திடுக!

சென்னை:

கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை யை உயர்த்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. 


கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் செவ்வாயன்று நடை பெற்றது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:

+2 தேர்வு முடிவு வெளிவந்து தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கடந்த சில வருடங்களாக குறைந்துவரும் பின்னணியில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் பெரு மளவு விண்ணப்பித்துள்ளனர். 


குறிப்பாக, 60 இடங்கள் உள்ள பி.காம் வகுப்பிற்கு 1200 மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர் என ஒரு கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே நிலைமைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. எனவே அரசுக்கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களது சேர்க்கைக்கான எண்ணிக்கையை 10 முதல் 20 சதம் உயர்த்துவதோடு, கூடுதல் வகுப்புகளையும் சேர்க்க தமிழக அரசு விரைவான நட வடிக்கைகளை எடுத்து, மாணவர்களது உயர்கல்வி பெறும் உரிமை, வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.


100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்திடுக!

இடதுசாரி கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2006ல் கொண்டு வந்த 100 நாள் கிராமப்புற வேலைத் திட்டம் தற்போது முழுமையாக செயல்படவில்லை. மத்திய அரசின் புள்ளிவிபர கணக்கின்படியே 2016-17, 2017-18,2018-19 ஆண்டுகளில் சராசரியாக 47 நாட்கள்மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இத்திட்டம் முழுமையாக செயல்படவில்லை. 61 நாட்கள் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படு கிறது. மத்திய அரசு போதுமான நிதி வழங்காததன் காரணமாகவே இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வில்லை.


அத்துடன் இந்த வேலைத் திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முறையாக சட்டக் கூலி வழங்காமல் மிகவும் காலம் தாழ்த்தியே வழங்கப்படுகிறது. பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் இதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு நிலுவைக் கூலி வழங்குவதற்கான போராட்டங்களை நடத்தி வருகின்றன.


கிராமப்புற பொருளாதாரம் மிகவும் சீரழிந்து வரும் நிலையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டுமெனவும், இந்த வேலையில் ஈடுபடுபவர்களின் கூலியை ரூ. 300 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


;