tamilnadu

img

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் செய்த மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  அதன் பின்னர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.இந்த நிலையில் அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத் தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை  ரத்து செய்வதற்கு காவல்துறை காட்டும் அக்கறை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.  கடந்த 19 ஆம் தேதி இறுதிக்கட்ட வாதங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்த மனு மீதான தீர்ப்பு செவ்வாயன்று (ஜூன் 23) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை யினர் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

;