tamilnadu

img

தனியார் பள்ளிகள் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:
வகுப்புகளை நடத்த ஆசிரியர்களைவற்புறுத்தும்போது,  ஊதியம் வழங்கவேண்டாமா? என்றும்  கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்  கேள்வி எழுப்பி யுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும்  ஊரடங்கு அமலில் உள்ளது.இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் பாடங்களை நடத்துகின்றனர்.இதனிடையே தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு தனியார்பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகிலஇந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என  கேள்வி எழுப்பினர்.

மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது, அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா என்று  கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;