tamilnadu

img

அரசு தேயிலை தொழிற்சாலைகள் மூடல் தொழிலாளர் கதி என்ன?

சென்னை:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டான்டி நிறுவனம் கூடலூர் பகுதியில் இயங்கும் சேரம்பாடி, பாண்டியார் மற்றும் சேரங்கோடு ஆகியதேயிலை தொழிற்சாலைகளை மூடிவிட்டு தொழிலாளர்களை அவல நிலைக்கு அரசு தள்ளி உள்ளது.தமிழக அரசுக்கு சொந்தமான டான் டி நிறுவனம் வெளி நாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய, குறிப்பாக இலங்கையிலிருந்து நாடுதிரும்பிய மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு டான்டி நிறுவனத்தை உருவாக்கியது. அது கடந்த பல ஆண்டுகளாக நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக நிர்வாகம் தெரிவித்தது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சட்டப்படி சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் சட்ட பலன்கள் பல ஆண்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. மேலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை சம்பளம் போன்றவற்றை சிஐடியு  உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி பெற்றுத் தரப்பட்டது.

இந்நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள 268 ஹெக்டேர் தோட்ட விளைநிலங்களை தமிழக வனத்துறை நிறுவனத்திற்கு விலங்குகள் தாக்குதல்களிலிருந்து தொழிலாளர்களை பாதுகாத்திட என குத்தகைக்கு விட்டுள்ளது.தோட்டப் பகுதிகளில்பணிபுரியும் தொழிலாளர்களை  யானைகள் மற்றும் பலவிலங்குகள் தாக்குவது, மேலும் தோட்டங்களை சேதப்படுத்துவது என்றகாரணம் கூறி, தமிழ்நாடு வனத்துறைக்கு குத்தகைக்குவிட்டுவிடலாம் என்று டான்டிமேலாண்மை இயக்குநர் தமிழக அரசுக்கு கடந்த 8.02.18 அன்று கடிதம் மூலம் பரிந்துரைத்துள்ளார். இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கடிதம் அனுப்பியது. மேலும், நீலகிரி எஸ்டேட் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கண்டனஇயக்கம் நடத்தியது. இதனிடையே, டான்டி மேலாண்மை இயக்குநர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் தமிழக அரசு அந்த தோட்டங்களை தமிழக வனத்துறைக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.அங்கு பணிபுரிந்து வரும் 1300 தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை பற்றியோ அவர்களின் வீட்டு வசதிகள், மருத்துவம் மற்றும் குழந்தைகளின் கல்வி நிலைகளை குறித்து மாற்று ஏற்பாடுகள் பற்றியோ தமிழக அரசு கவலைப்படவில்லை.

இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி, சேலம், கோவை, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும்நெல்லை மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 8 வியாழக்கிழமை அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனதமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) ஒருங்கிணைப்பாளர் கே.சி.கோபிகுமார் கூறியுள்ளார்.

;