tamilnadu

img

பணியில் விலக்கு அளிக்கும் அரசாணை வெளியிட வேண்டும்.... முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடிதம்

சென்னை:
மாற்றுத்திறன் அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் விலக்கு அளிக்கும் அரசாணையை வெளியிடுமாறு தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா பேரிடர் காரணமாக தமிழகத்தில் 6வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.  பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவை இயங்கவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிரமங் களை கணக்கில் கொண்டு, அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறன் ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணைகள் பிறப்பித்து வருகிறது.இந்த அரசாணைகள் உரிய காலத்தில் வெளிவராமல், 10 முதல் 15 நாட்கள் காலதாமதமாக அரசு வெளியிடுவதால் மாற்றுத் திறன் ஊழியர்கள் சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அரசாணை வெளிவராத காலத்தில், பல்வேறு துறைகளின் கீழ்மட்ட அதிகாரிகள், மாற்றுத்திறன் ஊழியர்களை பணிக்கு வரச்சொல்லி துன்புறுத் தும் போக்குகள் தொடர்ந்து நிகழ் கின்றன. ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காலத்திற்கும் இதுவரை அரசாணை வெளியாகவில்லை. எனவே, அரசாணையை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும்.

உள்ளாட்சி, போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவு, உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறன் ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் அரசாணையை உறுதிப் படுத்தி வெளியிட வேண்டும். அரசாணைக்கு உள்நோக்கம் கற்பித்து மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு விரோதமாக கீழ் மட்ட அதிகாரிகள் செயல்படாமல் தடுக்கும் வகையிலும் அரசாணையை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

;