tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை முழுமையாக திரும்பப் பெறுக! ஆட்டோ சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 22- மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும் என்று  அனைத்து ஆட்டோ தொழிற் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. அனைத்து ஆட்டோ தொழிற்  சங்க கூட்டமைப்பு சார்பில் வியா ழனன்று (ஆக.22) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் எஸ்.பாலசுப்பிரமணியம், ஏ.எல்.மனோகரன் (சிஐடியு), மு.சம்பத் (ஏஐடியுசி), அமெ ரிக்கை நாராயணன் (இனோடா),  பி.டி.சாமுவேல்பால் (எஸ்டி டியு), குப்பன் (அம்பேத்கர் இயக்  கம்) உள்ளிட்டோர் கூறிய தாவது: இதில் பேசிய தலைவர்கள், மோட்டார் வாகன சட்டம் கார்ப்ப ரேட் நிறுவனங்களை ஊக்கு விக்கவே உருவாக்கப்பட்டுள் ளது. இது, போக்குவரத்து துறை யில் மாநில அரசின் உரிமையை  பறிக்கிறது. தற்போது நடை முறையில் உள்ள பர்மிட் முறைப்  படி ஒரு ஆட்டோ குறிப்பிட்ட எல்லைவரைதான் இயக்க முடி யும். இச்சட்டத்திருத்தத்தின் வாயிலாக பர்மிட் ரத்து செய் யப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் (லைசன்ஸ்) வைத்திருப்போர் எங்கு வேண்டுமானாலும் ஆட்டோ வாங்கி, எல்லை வரை யறையின்றி இயக்க அனுமதிக்கி றது. இதனால் தொழில் நிலைத் தன்மை பாதிக்கப்படும். ஆட்டோ வாகன பதிவுக் கட்ட ணம் 600 ரூபாயிலிருந்து 5ஆயி ரம் ரூபாயாகவும், பர்மிட் புதுப்  பித்தல் கட்டணம் 215 ரூபாயி லிருந்து 7 ஆயிரத்து 500 ரூபாயாக வும், தகுதிச்சான்று (எப்சி) கட்ட ணம் 625 ரூபாயிலிருந்து 10 ஆயி ரம் ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், காப்பீட்டு கட்டணம் 3 ஆயிரத்து 850 ரூபாயிலிருந்து 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்  புடைய சிறுவிபத்துகள், சிறு குற்றங்களை கிரிமினல் குற்ற மாகக் கருதி சிறை தண்டனை, 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற பிரிவு கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆட்டோ தொழிலை அழிக்கும் வகையில் உள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும். ஓலா, உபேர் போன்ற கால்  டாக்சி நிறுவனங்கள் தங்கள்  விருப்பத்திற்கு கட்டணம் நிர்ண யித்து தான்தோன்றித்தனமாக செயல்படுகின்றன. ஆகவே, கால்டாக்சி கட்டணத்தை அரசு  நிர்ணயிக்க வேண்டும். பெட்ரோ லிய விலை உயர்வுக்கேற்ப ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும்.
நாளை ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு அறிவித்தபடி  இலவச ஜிபிஎஸ் மீட்டரை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சனிக்கிழமையன்று (ஆக.24) மாவட்டத் தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு, சாலைபோக்குவரத்து சம்மேள னம், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

;