tamilnadu

img

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா?

சென்னை:
தனியார் பள்ளிகள் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.இதுகுறித்து அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் அரசுத் தரப்பில் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையின் விவரம் வருமாறு:-தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முதலமைச்சரின் அறிவிப்பு படி, அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டதோடுஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் பயிலும் அனைத்துவகை பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டி நெறிமுறைகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் அனுப்பியதோடு அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளித் தேர்வு பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப் பட்டது.ஆனால் தற்போது, பள்ளிகளை மீண்டும் திறந்தும் ஏற்கனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்கப்படும் என்றும் சில தனியார் பள்ளிகளால் பெற்றோர்க ளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது.

அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ள நிலையில், சில மெட்ரிகுலேஷன் மெட்ரிகுலேஷன், மேல்நிலை பள்ளி நிர்வாகங்கள் மீண்டும் தேர்வை நடத்துவோம் என்று அறிவித்திருப்பது சட்டப்படி விதி மீறலாகும். அரசின் உத்தரவை மீறும் பள்ளிகள் குறித்த விபரங்களை சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

;