tamilnadu

img

மே 18 வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை:
ஊரடங்கு முடியும்வரை  கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே 6 ஆம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், பயனீட்டாளர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப் பட்டிருந்தது.இந்நிலையில், ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மே 6 ஆம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற இறுதிகெடுவை ரத்துசெய்யக்கோரியும், ஜூலை 31ஆம் தேதி வரை தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் சி.ராஜசேகர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித்கோத்தாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பரன்சிங் மூலம்விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 18 ஆம் தேதி வரைமின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும்,  தாழ்வான மின் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது   என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும்மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்க அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

;