tamilnadu

img

தமிழகத்தை மிரட்டும் கொரோனா....  மேலும் 3509 பேருக்கு பாதிப்பு...  

சென்னை 
கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது தமிழகத்தில் மையம் கொண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இன்று இதுவரை இல்லாத அளவில் 3 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் செய்தியாக 2,236 பேர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின்  மொத்த  எண்ணிக்கை 40 ஆயிரத்தை (39,999) நெருங்குகிறது.  இன்றைய தமிழக பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.

;