tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பாதிப்பு எண்ணிக்கை கூடுவதும், குறைவதுமாக உள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தாலும், உயிரிழப்பு எணிக்கை புதிய உச்சத்தில், அதாவது தினமும் 100-யை தாண்டி வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 108 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் 6,571 (?) பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், மாநிலத்தில் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.   

;