tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் 4,894 பேர் குணமடைந்தனர்... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் உச்சத்தில் உள்ளது. மக்கள் நெருக்கம் உள்ள நகர பகுதிகளில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தற்பொழுது நெரிசல் இல்லாத கிராம பகுதியிலும் தனது பரவலை தொடங்கியது. இதனால் மாநிலத்தின் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்து தொடும் அளவிற்கு எகிறுகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (செவ்வாய்) ஒரே நாளில் 75 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மந்தமாக இருந்த நிலையில், இன்று மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4,894 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் 1,26,670 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 51,334 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்றைய  தமிழக கொரோனா பாதிப்பில் 78 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள். 

பரிசோதனை விபரம் : 
தமிழகத்தில் இன்று (செவ்வாய்) கொரோனா அறிகுறிகளுடன் 51,066 மாதிரிகள் சோதனைக்கு வந்தன. 50 ஆயிரத்து 55 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 4,965 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மொத்த மாதிரி சோதனை 20,35,645 ஆக அதிகரித்துள்ளது. 19,56,673 மாதிரிகள் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மாநிலத்தில்  பரிசோதனை மையங்கள் 113 ஆக உயர்ந்துள்ளது.  

;