tamilnadu

img

இலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை;
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய பாஜக அரசின் திட்டத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய பாஜக அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் விதமாக அமைந்துள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னையிலுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் நடந்தஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்.

;