tamilnadu

4 ஆண்டுகளாக மத்திய அரசு நிதி தரவில்லை: அமைச்சர்

சென்னை, ஜூலை 2 - கல்வி உரிமைச்சட்டத்தில் பயிலும் மாண வர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக  மத்திய  அரசு நிதி வழங்காமல் உள்ளது. இருப்பி னும் மாநில அரசு தனது சொந்த நிதியில்  கட்டணம் செலுத்தி வருகிறது  என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். பேரவையில் செவ்வாயன்று (ஜூலை 2)  நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானி யத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்பிறகு அவர் வெளி யிட்ட அறிவிப்புகள் வருமாறு: கல்வி மாவட்டத்திற்கு ஒரு பள்ளி தலா  20 லட்சம் ரூபாய் செலவில் முன்மாதிரி பள்ளியாக மாற்றப்படும். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் ஆங்கில வழி யில் பயிலும்  மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும். பள்ளி மாண வர்களின் வருகை குறித்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். 223 மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல்  கருவிகள், தானியங்கி கருவிகள், நுண்கட்டுப்  பாட்டு பலகைகள் கொண்ட  அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் தலா 20 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். 2381 அரசு நடுநிலைப் பள்ளி வளா கத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்க ளில் முன்பருவக் கல்வி (எல்கேஜி) தொடங்  கப்பட்டுள்ளது. இவற்றில் பணியாற்று 2381  ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக் கப்படும். மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த நலவாழ்வு திட்டம் 12.31 கோடி ரூபாய் செல வில் செயல்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டம், மலையப்ப நகரிலும், நெல்லை மாவட்டம் வள்ளியூரிலும் தலா ஒரு உண்டு உறைவிடப்பள்ளி தொடங்  கப்படும். மாவட்ட மைய நூலகங்களில் செவி மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உடைய வர்களுக்கு சிறப்பு பிரிவு தொடங்கப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்ப டும். இவ்வாறு அவர் கூறினார்.

;