tamilnadu

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு

சென்னை, மே 6-சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பில் இந்த ஆண்டு 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் தேர்ச்சி விகிதம் 4 ஆண்டுக ளுக்குப் பிறகு உயர்ந்துள் ளது.சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு திங்களன்று (மே6) பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in  அல்லது cbse.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக, மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 91.1 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மண்டலத்தில் 99.85 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99 விழுக்காடு தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், 95.89 விழுக்காடு தேர்ச்சியுடன் அஜ்மீர் மண்டலம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.இதேபோல் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் முதல் இரண்டு இடங்களை திருவனந்தபுரம் மற்றும் சென்னை மண்டலங்கள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம், 2014 ஆம் ஆண்டிலி ருந்து படிப்படியாக குறைந்து வந்தது. 2014ல் 98.87 விழுக்காடு மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு 97.32 விழுக்காடு, 2016 ஆம் ஆண்டு 96.2 விழுக்காடும் 2017 ஆம் ஆண்டு 93.06 விழுக்காடும், 2018 ஆம் ஆண்டு 86.07 விழுக்காடு என 4 ஆண்டுகள் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தொடர்பாக உளெந.niஉ.in என்ற இணையதளம் மூலம் வரும் 24 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

;