tamilnadu

img

பொதுமுடக்கத்தால் நசிந்து போன முந்திரி தொழில்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த 3 மாதங்களாக முந்திரி தொழில் நசிந்து  போயுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் தொப்பையாங்குளம், எலவத்தடி, சேந்தநாடு, ஒல்லியாம்பாளை யம், கல்லமேடு உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் முந்திரி  பயிர் செய்யப்படுகிறது. விவசாயிகளிட மிருந்து முந்திரி கொட்டைகளை வாங்கி உடைத்து முந்திரி ஏற்றுமதி செய்வதற்கென்று இப்பகுதியில் ஏராளமான முகவர்கள் உள்ளனர். அவர்கள் வாங்கும்  முந்திரியை பல்வேறு கிராமங்களில் உள்ள பத்துக்கும்  மேற்பட்ட சிறு நிறுவனங்களிடம் கொடுத்து விடுவர். அந்த நிறுவனங்கள் இந்த முந்திரிக் கொட்டை களை உடைத்து, அதனை தரம் பிரித்து கேரளா  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படு கின்றன. கடந்த மார்ச் மாதத்திலிருந்து முழு முடக்கம்  அமலாக்கத்திலிருக்கும் நிலையில் இத்தொழிலில் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பதாக சிறு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சேந்தநாட்டைச் சேர்ந்த அசோக் (25) என்ற வாலிபர் கூறினார்.  “முகவர்களிடம் இருந்து முந்திரி கொட்டை மூட்டைகளை பெற்று வாரத்திற்கு  150 மூட்டைவரை உடைத்து கொடுப்போம். 1  எடை என்பது மூன்று கிலோ ஆகும். 25  எடை கொண்டது ஒரு மூட்டை (75 கிலோ).  இதற்கு ரூபாய் 500 உடைப்பதற்கு மட்டும் கூலியாகக் கொடுப்போம். என்னிடம் உள்ள 35 பேருக்கு மாத ஊதியமாக சுமார்  75 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். இதில் ஓரளவு லாபம் கிடைத்த நிலை யில் பொதுமுடக்கம் காரணமாக பெரிய அளவில் தொழில் நசிந்து போயுள்ளது. என்னைப் போன்ற சிறு நிறுவன உரிமை யாளர்கள் தற்போது வட்டிக்கு கடன் வாங்கியும், வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்தும் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் கொடுக்கிறோம். ஆனால் முந்திரியை உடைத்து எடுத்துச் செல்லும் முகவர் அதனை வியாபாரம் செய்தபின் எங்களுக்கு பணம் வழங்குவது வழக்கம் என்பதால் தற்போது மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறோம். எனவே முந்திரி தொழிலை பாதுகாக்க அரசு சிறு நிறுவன உரிமையாளர்களுக்கு நிவாரணம் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்

அசோக்.  -சாமிநாதன்

;