tamilnadu

img

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இம் மாதம் 28 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ‘சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இது காலையில் வெடிக்கும்’ என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை காவல்துறையினர், காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் முதலமைச்சர் வீட்டில் சுமார் 1 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடி பொருளும் சிக்கவில்லை.இதனைத்தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் யார் என்று  விசாரணை நடத்தினர். சைபர் கிரைம்  நடத்திய விசாரணையில் அந்த அழைப்பு சென்னை சேலையூரை சேர்ந்த கார் ஓட்டுநர் வினோத்குமார் என்பது தெரிய வந்தது. பின்னர், அவரை கைது செய்து விசாரித்ததில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டதால் கைது செய்தனர்.

;