tamilnadu

img

சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை:

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல்துறை யினர் தீவிர சோதனை நடத்தினர்.


மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், வாக்குஎண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற் கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக்

கூட்டத்தில், தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவும் பங்கேற்றார்.


போதிய பாதுகாப்பு, வாக்குகளை எண்ணுவது தொடர்பாக தேர்தல் ஆணை யம் கூறிய ஆலோசனைகள் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் தொடர்பாக அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.இதனிடையே ஆலோசனைக் கூட்டம் ஒருபுறம் நடந்து கொண்டி ருக்க, சத்ய பிரத சாகுவின் அறைக்கு வந்த ஒரு கடிதத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டு இருந்ததால் உடனடியாக கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அனுப்பு நர் விவரங்கள் எதுவும் இல்லாத அந்த மொட்டைக் கடிதம் எப்படி வந்தது? அனுப்பியது யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

;