tamilnadu

img

தேசிய பட்டியலினத்தவர் ஆணைய பதவிகளை நிரப்பாத பாஜக: தொல். திருமாவளவன் சாடல்

சென்னை:
தேசியப் பட்டியலினத்தவர் ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர், மூன்று உறுப் பினர்கள், செயலர்கள் என காலியாக உள்ள 12 பதவிகள் உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மத் திய அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தேசிய ஆணையம் பட்டியலினத்தவருக்கான ஆணையமாகும். தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டதையொட்டி மாநிலங்கள் எல்லாவற்றிலும் மாநில அளவிலான ஆணையங்கள் உருவாக்கப்பட் டன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மாநில அளவிலான பட்டியலினத்த வருக்கான ஆணையம் உருவாக்கப்பட வில்லை.

இந்நிலையில் இது குறித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“தமிழ்நாட்டில் மாநில அளவிலான ஆணையத்தை உருவாக்கு வது தொடர்பாகப் பலமுறை வலியுறுத்தியும் கூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” குறிப்பிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத் தில் இதற்காக வழக்கு தொடுக் கப்பட்டு 6 மாதங்களுக்குள் மாநில ஆணையத்தை உருவாக்குகிறோம் என்று தமிழக அரசின் சார்பில் உறுதிமொழி அளித்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும்கூட அந்த ஆணையம் உருவாக்கப் படவில்லை என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.தேசிய ஆணையத்தின்  இயக்குனர் அலுவலகம் மட் டுமே தமிழ்நாட்டில் இருக்கிறது. அதிலும் இயக்குனர், துணை இயக்குனர் உதவியாளர்கள் உள்ளிட்ட 8 பதவிகள் நீண்ட நாட் களாகவே காலியாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அளவில் பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதை தேசிய குற்ற ஆவண மைய அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. இந்த வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் மத்திய அரசும் பின்பற்றுவதில்லை; தமிழக அரசும் பின் பற்றுவதில்லை. இதை மேற்பார்வை செய்வதற்கான அமைப்புதான் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையமாகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் முதலான பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது இந்தியாவிலி ருக்கும் பட்டியல் இன மக்களை எந்த அளவுக்கு பாஜக அரசு புறக் கணிக்கிறது என்பதற்குச் சான்றாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.பட்டியலின மக்கள் பாதிக்கப் பட்டால் அவர்கள் முறையிடுவதற்கு தேசிய ஆணையத்திலோ தமிழ்நாட்டில் இருக்கும் மாநில அலுவகத்திலோ எவரும் இல்லை என்கிற நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.  இந்தப் பதவிகளை  நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

;