tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் துவங்கியது

சென்னை, பிப். 2- மதச்சார்பின்மைக்கு எதிராக பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசியக் குடிமக்கள் பதி வேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மதச்சார்ப் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி  கையெழுத்து பெறும் இயக்கம் ஞாயிறன்று (பிப். 2) தொடங்கியது. தமிழகம்  முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத் தார். இதில் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திமுக மாவட்டச் செய லாளர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்.நல்லகண்ணு, கே.பாலகிருஷ்ணன்
சென்னை சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிர மணியம் ஆகியோர் துவக்கி வைத்த னர். விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத் தார். இதில் திமுக மாவட்டச் செய லாளர் பொன்முடி எம்எல்ஏ, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணி யன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.வி. சரவணன், காங்கிரஸ் மாவட்டச் செய லாளர்கள் சீனுவாசகுமார், ரமேஷ், மதி முக மாவட்டச் செயலாளர் பாபு கோவிந்தராஜ், மமக மாவட்டச் செய லாளர் முஸ்தாகிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை கையெழுத்து இயக்கம் ஞாயிறன்று நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளர், சிங்கா நல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் நா. கார்த்திக் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இவ்வியக்கத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன்குமார், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், காங்கிரஸ் கட்சி யின் கணபதி சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய லாளர் ஜோ.இலக்கியன், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், கொமதேக மாவட்டச் செயலாளர் தனபால், மனிதநேய மக்கள்  கட்சி ஜெம்.பாபு, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட தோழமை கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரியில் முதலமைச்சர் வே.நாராயணசாமி துவக்கி வைத்தார். இதில் அமைச்சர் நமச்சிவாயம், சிபிஎம் பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், மூத்த பிரதேசக் குழு உறுப்பினர் முருகன், சிபிஐ நிர்வாக குழு உறுப்பினர் அபி ஷேகம், விசிக முதன்மைச் செய லாளர் தேவ.பொழிலன், செல்வராசு (மதிமுக), திராவிடர் கழக புதுவை தலைவர் வீரமணி, மனித நேய மக்கள் கட்சி செயலாளர் பஷீர்அகமது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலை வர் ஜிகினி முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கி.வீரமணி 
கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கே.வீரமணி துவக்கி வைத்தார். இதில் திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் லோகநாதன், சிபிஐ மாவட்டச் செயலாளர் அ.பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், கோ.வி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கே.எஸ்.அழகிரி
ஆவடியில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கி வைத்தார். இதில் திமுக மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர், எம்.ராமகிருஷ்ணன் (சிபிஎம்), டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் (மதிமுக) ஆகியோர் கலந்து கொண்டனர்.  ராயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் துவக்கி வைத்தார். இதில் திமுக மாவட்டச் செயலாளர் சுந்தரம், செல்வானந்தம் (சிபிஎம்), எம்.எஸ்.மூர்த்தி (சிபிஐ), உ.பலராமன் (காங்கிரஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர். 

மன்னடியில் வைகோ
சென்னை மன்னடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துவக்கி வைத்தார். இதில் மக்களவை உறுப்பி னர் தயாநிதி மாறன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மதிமுக மாவட்டச் செயலாளர் ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூரில் திருமாவளவன்
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் துவக்கி வைத்தார். திராவிட கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் டி.மணி வாசகம், விசிக மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலை வர் ஷேக் தாவூத், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை ஆலந்தூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் க.பீம்ராவ் துவக்கி வைத்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் திரா விடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருவொற்றியூரில் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாரா யணன் துவக்கி வைத்தார். இதில் வீ.கண்ணதாசன் (திமுக) ஆர்.ஜெய ராமன் (சிபிஎம்), பாக்கியம் (மாதர் சங்கம்) ஆகியோர் கலந்துகொண்டனர். கையெழுத்து இயக்கம் நடைபெற்ற பகுதிகளில் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை எவ்வளவு ஆபத்தானது என விளக்கும் துண்டறிக்கையையும் பொதுமக்கள் கவனமாகப் படித்தனர். தலைவர்கள் கையெழுத்திட்ட பின்னர் மாநிலம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில்  வீதி வீதியாகச் சென்று பொது மக்களைச் சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து பெறப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரம், ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகளில் நடைபெற்று வருகிறது. வரும் 8ஆம் தேதி வரை இந்த இயக்கம் நடைபெறுகிறது.

குடியரசுத்தலைவரைச் சந்திக்கத் திட்டம்
1 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டதும் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினரும் புதுதில்லியில் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த்தை சந்தித்து கையெழுத்து படிவங்களை வழங்க உள்ளனர்.

;