tamilnadu

தடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு

சென்னை,மார்ச் 25- கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் 144 தடையுத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வெளியில் வரக்கூடாது என்று அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புதுச்சேரியில் தடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய  45 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. சென்னையில் வெளியே சுற்றி  திரிந்ததாக 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்பேட்டை சேர்ந்த தந்தை, மகன் ஆகியோர் ஈராக்கில் இருந்து 22 ஆம் தேதி திரும்பிய நிலையில், வீடு களில் 28 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் வெளியே சுற்றி திரிந்ததாக மருத்துவதுறையிடம் இருந்து கோயம்பேடு காவல்துறை யினருக்கு புகார் வந்தது. இதனடிப்படையில் 2 பேர் மீதும் கோயம்பேடு காவல்துறையினர் தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதேபோல் சீனாவில் இருந்து திரும்பிய நிலையில் அண்ணாநகரி லுள்ள வீட்டில் தனிமையில் இருக்கா மல் வெளியே சுற்றியதாக ஒருவர் மீது திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி  புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறியதாக 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அங்கு தடை உத்தரவு அமலில் உள்ளது. வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், உத்தரவை மதிக்கா மல், கடைகளை திறந்து வைத்த  மற்றும் அநாவசியமாக சுற்றித்திரிந்த 42 பேர் மீது அங்குள்ள காவல்நிலை யங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

;