tamilnadu

img

தமிழகத்தில் கொரோனவிலிருந்து 1210 பேர் குணமடைந்துள்ளனர்.... 

சென்னை 
தமிழகத்தில் கொரோ பரவல் உச்சத்தை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது.  மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 104. இதையடுத்து மொத்த எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது
செவ்வாயன்று 8,087 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. மொத்த சாம்பிள்கள் சோதனை 1,09,961. நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் 1,01,075, பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 41 இடங்களில் தொற்று ஆய்வகங்கள் உள்ளன. வீட்டுக் கண்காணிப்பில் 30,580 பேர் உள்ளனர்.  கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 1,821 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசுக் கண்காணிப்பில் 48 பேர் உள்ளனர். செவ்வாயன்று 82 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,210 பேர் குணமடைந்துள்ளனர். வீடு திரும்பியவர்கள் தவிர 922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புதனன்று இருவர் உயிரிழந்தனர். இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை  27 ஆக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமாக  சென்னையில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது.  காஞ்சிபுரத்தில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். மொத்த எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரத்தில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வயது முதல் 12 வயது வரையிலானவர்கள் 129 பேர். இதில் பெண்கள் 71 பேர். ஆண்கள் 58 பேர். 13 வயது முதல் 60 வரையில பாதிக்கப்பட்டவர்கள் 1,788 பேர். பெண்கள் 1,214 பேர். ஆண்கள் 574 பேர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 245 பேர். பெண்கள் 171 பேர். ஆண்கள் 74 பேர்.புதனன்று பாதிக்கப்பட்டவர்களில்  இரண்டு, நான்கு, ஆறு, பத்து வயதுடைய குழந்தைகள் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயது வரைக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி 129-ஐ தொட்டுவிட்டு. இது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது.
 

;