tamilnadu

img

அண்ணாமலை பல்கலை. வேளாண் பேராசிரியருக்கு பருவ நிலை மாற்ற ஆய்வுக்கு விருது

அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் விரிவாக்கத் துறை இணை பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவினின் சிறந்த ஆய்வு கட்டுரைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சென்னை வேளாண் மாணவர்சங்கம் (Madras Agricultural Students Union)சார்பில் திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம்வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் “பருவ நிலை மாற்றச் சூழலில்வாழ்வுரிமை பாதுகாப்பு: சவால்களும், வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. நமது நாட்டின் பல வேளாண்ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக் கழகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வேளாண் மற்றும் தோட்டக்கலை விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து கலந்துரையாடல் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணை பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவினின் கடலோரத் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கும் புதிய சாகுபடி முறை பற்றிய ஆய்வுக் கட்டுரை சிறந்த கட்டுரையாக விஞ்ஞானிகளால் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.முனைவர் தி.ராஜ்பிரவின் தீக்கதிர் நாளிதழில் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் வேளாண் கட்டுரைகள் மற்றும் பொது கட்டுரைகளை எழுதிவருகிறார். மேலும் உழவன் உரிமை, ஜனசக்தி, மார்க்சிஸ்ட் (தமிழ்) ஆகிய இடதுசாரி இதழ்களில் பல வேளாண் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். 

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சிறந்த முதுநிலை ஆராய்ச்சி விருதுகோவையின் புகழ் பெற்ற பூ.சா.கோ. பொறியியல்மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரியின் அறிவியல்கருத்தரங்கில் சிறந்த ஆய்வு கட்டுரைக்கு முனை
வர் ஜி.ஆர்.தாமோதரன் நினைவு சுழல் கேடயம்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சிறந்த வேளாண் ஆய்வுக்கு டி.நடராஜ் சுழல் கேடயம் மற்றும் விருது மற்றும் சர்வதேச மிக வறட்சிப்பிரதேசங்களுக்கு ஆய்வு நிலையத்தின் சிறந்த ஆய்வுக் கட்டுரை விருது போன்றவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;